கொரோனா பரிசோதனை முடிவில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நெகட்டிவ்: மகன் எஸ்.பி.சரண் வீடியோ

கொரோனா பரிசோதனையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நெகட்டிவ் வந்துள்ளது என அவரது மகன் சரண் கூறியுள்ளார்.

சென்னை, செப்-7

எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து அவருடைய மகன் எஸ்.பி. சரண் இன்று தெரிவித்ததாவது:-

எஸ்.பி.பி.யின் நுரையீரல் செயல்பாடு முன்னேற்றம் அடைந்து வெண்டிலேட்டர் உதவி தேவையிருக்காது என எண்ணினோம். ஆனால் வெண்டிலேட்டரை நீக்கும் அளவுக்கு நிலைமை மாறவில்லை. நல்ல செய்தி என்னவென்றால் கொரோனா பாதிப்பிலிருந்து எஸ்.பி.பி. குணமடைந்து விட்டார். கொரோனா பரிசோதனையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நெகட்டிவ் வந்துள்ளது. அதைவிடவும் அவருடைய நுரையீரலின் பாதிப்பு விரைவில் குணமாக வேண்டும் என்பதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அது குணமாகிவருகிறது என்றாலும் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.

#spb health update 7/9/20

Posted by Charan Sripathi Panditharadhyula on Monday, September 7, 2020

கடந்த வார இறுதியில் அப்பா – அம்மாவின் திருமண நாளை சிறிய அளவில் கொண்டாடினோம். தன்னுடைய ஐ பேடில் கிரிக்கெட், டென்னிஸ் ஆட்டங்களைப் எஸ்.பி.பி. பார்த்து வருகிறார். ஐபிஎல் போட்டியைக் காண ஆவலாக உள்ளார். நிறைய எழுதி, அதன்மூலம் எங்களிடம் அடிக்கடி தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறார். அவர் சுயநினைவுடன் உள்ளார். இயன்முறை சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அனைவரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். நம்பிக்கையுடன் இருப்போம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *