மாணவர்கள் விருப்பப்படி பயிலும் வகையில் புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி பேச்சு

மாணவர்கள் விருப்பப்படி பயிலும் வகையில் கல்வி கொள்கை வகுக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி, செப்-7

புதிய கல்வி கொள்கை குறித்த கவர்னர்கள் மாநாடு இன்று தொடங்கியது. மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆகியோர் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது மோடி பேசியதாவது:-

புதிய கல்விக்கொள்கை மற்றும் கல்விமுறை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது. புதிய கல்விக்கொள்கை மாணவர்களின் திறனையும், அறிவையும் வளர்க்கும். புதிய கல்விக்கொள்கையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. கல்வி கொள்கையில் பங்கெடுத்துள்ள ஆசிரியர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுகின்றனர். கல்விக் கொள்கையை ஆசிரியர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். கொள்கை வகிப்பதில் கல்வியாளர்கள் கருத்து கூற பலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கல்வி முறையில் பங்குண்டு. தேசிய கல்வி கொள்கை வடிவத்தை முடிவு செய்து நாம் முன்னேறி செல்ல வேண்டும்.

கல்வி கொள்கை தொடர்பான விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எது நமது மூளையை சுதந்திரமாக செயல்பட வைக்கிறதோ அதுவே அறிவு.தேசிய கல்வி கொள்கை, நாடு முழுவதும் மிக விரைவில் செயல்படுத்தப்படும்.தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் பல்வேறு வாய்ப்புகள், கல்வி கொள்கையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாணவர்களின் தேர்வு சுமையில் இருந்து தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இருந்த பிரச்சினைகளுக்கான தீர்வு இந்த கல்வி கொள்கையில் உள்ளது.மாணவர்கள் விருப்பப்படி பயிலும் வகையில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக மாநிலங்களின் கருத்துகள் திறந்த மனதுடன் கேட்கப்படுகின்றன.மாநிலங்களின் கருத்துக்கள், சந்தேகங்கள் அனைத்திற்கும் தீர்வு அளிக்கப்படும். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டியது நம் அனைவரின் கூட்டு பொறுப்பு.

இவ்வாறு மோடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *