சீமானின் கோபம் சரிதான்-திருமா

தூத்துக்குடி, அக்டோபர்-16

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 2 தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மகத்தான வெற்றியை பெறுவார்கள். ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம் என எந்த இடத்திலும் விடுதலைப் புலிகள் கூறியதில்லை. இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டுக்கு அல்லது அரசியல் கோட்பாட்டுக்கு எதிரான ஒரு கருத்தை நாம் சொல்லுவது ஈழத்தமிழர்களின் மீதுள்ள பற்று மற்றும் பாசத்தை வெளிப்படுத்துவதாக அமையாது.

சீமானின் கோபம் சரிதான். ஆனாலும் விடுதலைப்புலிகளின் நிலைபாடு குறித்த கருத்து தெரிவிக்கும்போது எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மிக கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *