தமிழகத்தில் இன்று 5,783 பேருக்கு புதிதாக கொரோனா – 88 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, செப்-6

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்து 480 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து இன்று 5,820 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,04,186 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,836 ஆக அதிகரித்துள்ளது. அதிபட்சமாக சென்னையில் 17 பேரும், கோவையில் மற்றும் கடலூரில் தலா 5 பேரும், சேலத்தில் 6 பேரும், திருவள்ளூரில் 8 பேரும், திருப்பூரில் 4 பேரும் பலியாகி உள்ளனர். வேலூர், செங்கல்பட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். விழுப்புரம், திருநெல்வேலி உள்பட 7 மாவட்டங்களில் 2 பேர் பலியாகி உள்ளனர், ஒட்டுமொத்தமாக பார்த்தால் தமிழகத்தில் சென்னையில் தான் மிக அதிகமாக 2862 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் இன்று 84,034 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 51,26,231 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழத்தில் கொரோனா பாதித்தவர்களில் 4,04,186 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 51,458 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.

சென்னையில் கொரோனாவால் இன்று 955 பேர் பாதிக்கப்பட்டுளளனர்.சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 141654 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 538 பேரும், கடலூரில் 388 பேரும், செங்கல்பட்டில் 361 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 272 பேரும், திருவள்ளூரில் 246 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *