ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியீடு..முதல் ஆட்டத்தில் மும்பை – சென்னை மோதல்..!!

துபாயில் 19ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி தொடருக்கான கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் இடையே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய், செப்-6

ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்ன சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
2-வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், 3-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. செப்டம்பர் 22-ந்தேதி சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

10 நாட்களில் இரண்டு போட்டிகளில் நடைபெறுகின்றன. முதல் போட்டி 3.30 மணிக்கும், 2-வது போட்டி 7.30 மணிக்கும் நடைபெறுகிறது.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *