திருப்பதி திருமலை கோவிலில் செப். 30 ம் தேதி வரையில் இலவச தரிசனம் ரத்து

திருப்பதியில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி, செப்-5

கொரோனா பரவல் காரணமாக திருமலை திருப்பதியில் கடந்த மார்ச் மாதம் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த ஜூன் மாதம் கட்டுப்பாடுகளுடன் சுவாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்விளைவாக, திருப்பதியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் 2 அர்ச்சகர்கள் தொற்றுக்குப் பலியாகினர். இதையடுத்து, கோயில் நடை மூடப்பட்டது. இதனிடையே கடந்த 29ஆம் தேதி முதல் திருப்பதியில் மீண்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருப்பதியில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *