துரோகம் செய்தவர்களுடன் ஒருபோதும் இணைய வாய்ப்பில்லை-டிடிவி தினகரன்

மதுரை, அக்டோபர்-16

மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அ.தி.மு.க.வை ஆதரிப்பார் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, யார், யாரோ உளறுவதற்காக என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். வேறு கேள்வி கேளுங்கள். வேடிக்கையாக பேசுவதை கேள்வியாக கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். துரோகம் செய்தவர்களுடன் நாங்கள் இணைய வாய்ப்பே கிடையாது. விரைவில் ஒரு சில துரோகிகளை நீக்கிவிட்டு மற்ற அனைவரும் எங்களோடு வந்து இணைவார்கள். சிறையில் இருப்பவர் பேச முடியாத காரணத்தால் வெளியே இருப்பவர்கள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு பிரதமராக இருந்தவரின் படுகொலை பற்றி சீமான் பேசுவது சரியல்ல. தேவையில்லாத பிரச்சனையை கிளப்ப வேண்டிய அவசியம் இல்லை. சீமான் பேசியதை திரும்ப பெற்றுக்கொண்டால் அவருக்கும் நல்லது, என்னைப் போன்ற அரசியல்வாதிக்கும் நல்லது. ஆர்.கே.நகர் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டேன். விக்கிரவாண்டி, நாங்குநேரி, வேலூர் இடைத்தேர்தல்களில் ஒவ்வொரு சின்னத்திலும் போட்டியிட முடியாது. பல சின்னங்களில் போட்டியிட்டால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும். எனவே ஒரே சின்னம் பெற்று தேர்தலில் போட்டியிடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *