சென்னையில் 7ம் தேதி புறநகர் ரயில் சேவை தொடங்கும் என்ற தகவலுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு..!

சென்னையில் வரும் 7 ஆம் தேதி முதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று வெளியான செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை, செப்-5

தமிழகத்தில் தற்போது மாவட்டத்திற்கு இடையே பயணம் மேற்கொள்ள இ பாஸ் முறை ரத்து செய்யயப்பட்டு உள்ளது. மாவட்டங்களுக்கு உள்ளே பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. மறுபுறம் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே விரைவு பேருந்து போக்குவரத்து வரும் 7ம் தேதி துவங்குகிறது.

இதனிடையே, செப்டம்பர் 7-ம் தேதி முதல் தமிழகத்தில் மொத்தம் 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 9 ரயில்கள் இயக்கப்படும். மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வசதியாக இந்த ரயில் போக்குவரத்து ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் செப்டம்பர் 7-ந்தேதி முதல் புறநகர் ரயில் சேவை தொடங்கப்படும் என செய்திகள் வெளியானது. தமிழக அரசின் கோரிக்கையை அடுத்து இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளது என்று ம், இதற்கு கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகி வந்தது.

ஆனால் சென்னையில் வரும் 7 ஆம் தேதி முதல் புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று வெளியான செய்திகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் புறநகர் ரயில்களும் இப்போது இயக்கப்படாது. இது தொடர்பாக அட்டவணை எதையும் வெளியிடவில்லை. அதிகாரபூர்வ அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை. அதனால் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து தாம்பரம் வரை மின்சார ரயில்கள் இயக்கப்படும் என செய்தி வெளி வந்ததற்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *