எல்லாத்துக்கும் போராட்டம்னா, பொருளாதாரம் எப்படி வளரும்? – சலித்துக்கொண்ட தமிழிசை
போராட்டம்? போராட்டம்? என்றால் எப்படி வளரும் பொருளாதாரம்? வேலைவாய்ப்புக்கு முதலீடு எப்படி வரும்? “என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை, ஆக-31

பொதுத்துறை வங்கிகளை இணைப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
வங்கி ஊழியர்களின் போராட்டம் குறித்த இந்த அறிவிப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை தனது டுவிட்டர் பக்கத்தில், ‘வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என்று மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் உறுதி அளித்த பின்னரும் போராட்டஅறிவிப்பு ஏன்?. போராட்டம்? போராட்டம்? என்றால் எப்படி வளரும் பொருளாதாரம்? வேலைவாய்ப்புக்கு முதலீடு எப்படி வரும்?பொருளாதார சிரமங்களை சரிசெய்ய வேண்டாமா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.