வர்த்தக சீர்திருத்த செயல் திட்டம்-2019 தரவரிசைப் பட்டியலில் ஆந்திர மாநிலம் தொடர்ந்து முதலிடம்

2019ம் ஆண்டுக்கான மாநில வர்த்தக சீர்திருத்த திட்டம் தரவரிசை பட்டியலில் ஆந்திர பிரதேசம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

டெல்லி, செப்-5

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019ம் ஆண்டுக்கான மாநில வர்த்தக சீர்திருத்த திட்டம் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டார். இதில், ஆந்திர பிரதேசம் தொடர்ந்து முதல் இடத்தினை தக்க வைத்து கொண்டுள்ளது. இதனையடுத்து தெலுங்கானாவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்துக்கு உத்தர பிரதேசம் முன்னேறியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் 12வது இடத்தில் இருந்து இந்த இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.

கடந்த 2018ம் ஆண்டில் 2வது இடத்தில் இருந்து தெலுங்கானா 3வது இடத்திற்கு சென்றுள்ளது. தொடர்ந்து 4வது இடத்தில் மத்திய பிரதேசம், 5வது இடத்தில் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

மாநிலங்களின் தொழில் சீர்திருத்த செயல் திட்டங்கள் மற்றும் திட்ட அமலாக்கத்தின் அடிப்படையில் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *