மருத்துவ குழுவுடன் செப்டம்பர் 8-ந்தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை தலைமைச்செயலகத்தில் செப்டம்பர் 8-ஆம் தேதி மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை, செப்-5

தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு, மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. செப்டம்பர் 7 முதல் முழு அளவில் பேருந்து போக்குவரத்துக்கும், ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டு புதிய பல தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி செப்டம்பர் 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தளர்வுகளால் கொரோனா தொற்று அதிகரிக்கும்பட்சத்தில் அதனை எவ்வாறு கையாள்வது, மருத்துவ வசதிகளை அதிகரிப்பது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *