எம்ஜிஆரின் மறு உருவமே…தலைமையேற்க வா..!! விஜய் ரசிகர்கள் அதகள போஸ்டர்..!!

தேனி நகர் பகுதிகளில் நடிகர் விஜய்யை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரைப் போல சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி, செப்-5

தேனியில் நடிகர் விஜய்யை ‘ரிக்ஷாக்காரன்’, ’எங்க வீட்டுப்பிள்ளை’ திரைப்படங்களில் தோன்றும் எம்.ஜி.ஆர். போல சித்தரித்து, விஜய் ரசிகர்கள் சார்பில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேனி நகர்பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டிகளில் ‘எம்.ஜி.ஆரின் மறு உருவமே! மாஸ்டர் வாத்தியாரே! அழைக்கிறது தமிழகம் தலைமையேற்க’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

நடிகர் விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளால் தேனியில் விஜய் ரசிகர்கள் மற்றும் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக மதுரையில் பகுதிகளில் இதே போன்ற சுவரொட்டிகள் விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *