பாரம்பரிய மருத்துவத்தை போற்றும் S.P.வேலுமணி ..!

சென்னை, செப்-5

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகும் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை .தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணிவது,சமூகவிலகலை கடைபிடிப்பது,அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவது போன்ற அவசியமான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டு மென தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

அதேநேரத்தில் பொதுமக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் பாரம்பரிய உணவு கலாச்சாரத்திற்க்கு ஆதரவாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டிஜிட்டல் பிரச்சாரத்தில் நாள்தோறும் விதவிதமான தகவல்களை பதிவு செய்து வருகிறார். பாரம்பரியமே நம் முழுகவசம் என்பதை வலியுறுத்தும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்று திருமூலர் காட்டிய வழியில்,உணவே மருந்து என உணர்ந்து நடப்போம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பொதுமக்கள் அன்றாட வாழ்வில், தினந்தோறும் வீட்டிலேயே வேப்பிலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி குடிப்பது நல்ல பலனைத் தரும் என்றும் மஞ்சள் பொடியை வெது வெதுப்பான தண்ணீரிலோ, பாலிலோ கலந்து குடிப்பது மிகுந்த பலனளிக்கும் என்று தெரிவித்து இருக்கிறார். அது மட்டுமில்லை, மருத்துவ குணமுள்ள பூண்டு சேர்த்து காய்ச்சிய பாலில், பனங்கற்கண்டு கலந்து தினமும் பருகினால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் என்றும், இதயம் இரும்பாக, உதிரம் வலுவாக, நம் முன்னோர்கள் கண்ட பூண்டின் மகிமையை உணர்ந்து வலிமை பெறுவோம், நோய்த்தொற்று எதிரியை வெல்வோம் என்று தினமும் ஒரு மருத்துவக் குணம் அடங்கிய தகவல்களை மக்களின் நலனுக்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமது சமூக வலைதளங்களில் தெரிவித்து வருவது மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

நம்முன்னோர்கள் விட்டுச்சென்ற பாரம்பரிய மருத்துவமுறைகளே நம்மை காக்கும் முதல் கவசம் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் டிஜிட்டல் பிரச்சாரம் தொடர்கிறது.

கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவும் முன்பே அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. தமது துறை வழியாகவும், தனிப்பட்டமுறையிலும், கொரோனாவில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்களை கடந்த மார்ச் மாதம் முதல், தமது ட்விட்டர், பேஸ்புக், இண்ஸ்டாகிராம்,இணையதளம் வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே சென்றால் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்பதை வலியுறுத்தி, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமது சமூகவலைதள கணக்குப்பக்கங்களின் முகப்புபகுதியில் முகக்கவசம் அணிந்துள்ள புகைப்படத்தை பதிவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *