பாஜக டெல்லிக்கு மட்டுமல்ல…தமிழகத்திலும் ராஜாதான்.. ஹெச்.ராஜா பதிலடி..!

பாரதிய ஜனதா டெல்லிக்கு மட்டுமல்ல, தமிழகத்திலும் ராஜாதான் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

மதுரை, செப்-4

அண்மையில் மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க அமைச்சர் செல்லூர் ராஜு, டெல்லிக்கு ராஜான்னாலும் தமிழகத்தில் பா.ஜ.க. பிள்ளைதான். தமிழகத்தில் திராவிட கட்சிகள் மீதுதான் தேசிய கட்சிகள் சவாரி செய்ய முடியும், என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது ஹெச்.ராஜா இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையின் கீழ் ஆண்டு வருமானம் 10 லட்சத்திற்கு அதிகமாக உள்ள கோயில்களின் சொத்துகள், வருமானத்தை தணிக்கை செய்ய வேண்டும். கோவில் காணிக்கைகள் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதை ஆதாரத்தோடு கூறுகிறேன். அறநிலையத்துறையால் கோயில்களில் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்படுகிறது. கோவிலை அழிக்கும் துறையாக இந்து சமய அறநிலைத்துறை செயல்பட்டு வருகிறது. இந்துக்களை இந்து அறநிலையத்துறை சோதிக்கிறது, என்று குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அவர், பாரதிய ஜனதா டெல்லிக்கு மட்டுமல்ல, தமிழகத்திலும் ராஜாதான். பாரதிய ஜனதா கூட்டணியில் தான் அதிமுக உள்ளது. ரஜினி ஆளுமையான ஆள் என்பதால், அவர் பாஜகவில் சேர்வது குறித்து நான் கருத்து கூற முடியாது, என்று தெரிவித்தார். இதையடுத்து, ஆன்லைன் பாடம் தற்கொலை குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், காதலால் தற்கொலை நடப்பதால் காதலை தடை செய்ய சொல்ல முடியுமா? அதேபோல்தான் ஆன்லைன் வகுப்புகளும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *