தமிழகத்தில் இன்று 5,976 பேருக்கு கொரோனா தொற்று..!

தமிழகத்தில் இன்று புதிதாக 5976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 6334 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னை, செப்-4

தமிழகத்தில் இன்று புதிதாக 5,976 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 4,51,827 ஆக உயர்ந்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 3,92,507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 6,334 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 51,633 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 28 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 51 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 7,687 ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 992 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை 1,39,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,24,891 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12,003 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று 12 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மொத்த உயிரிழப்பு 2,826 ஆக உள்ளது.
  • தமிழகத்தில் மொத்தம் 155 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 64 அரசு மருத்துவமனைகளிலும், 91 தனியார் மருத்துவமனைகளிலும் பரிசோதனை நடத்தப்படுகிறது.
  • தமிழகத்தில் இதுவரை 49,62,357 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 81,588 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • பிற மாநிலங்களில் இருந்து இன்று தமிழகத்திற்கு வந்த 25 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் இதுவரை ஆண்கள் 2,72,739 பேரும், பெண்கள் 1,76,059 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 29 பேரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *