இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் யோகா பயிற்சி செய்து டென்சன் இல்லாமல் இருக்கவேண்டும் – பிரதமர் மோடி

பயிற்சி முடித்து பணியில் இணைய உள்ள இளம் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

ஐதராபாத், செப்-4

ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் பயிற்சி முடித்த இளம் அதிகாரிகள் அணிவகுப்பு மற்றும் பொறுப்பேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது, பயிற்சி முடித்த இளம் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
அப்போது தமிழகத்தைச் சேர்ந்த கிரண் ஸ்ருதியுடன் பேசியபோது, என்ஜினீயரிங் படித்துவிட்டு காவல் அதிகாரியாக ஏன் வந்தீர்கள்? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த கிரண் ஸ்ருதி, சீருடை அணிந்து மக்கள் பணியாற்றவேண்டும் என பெற்றோர் விரும்பியதால் இந்த பணியில் சேர்ந்ததாக கூறினார். கிரண்பேடி போன்று வரவேண்டும் என்பதால் தனக்கு கிரண் ஸ்ருதி என பெயர் வைத்ததாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் யோகா பயிற்சி செய்து டென்சன் இல்லாமல் இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *