கொரோனாவை தடுக்க அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.. அமைச்சர் S.P.வேலுமணி

சென்னை, செப்-4

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகம் முழுவதும், ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாண்புமிகு முதல்வர் அவர்களால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. எனினும், கோவிட்19 தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில், அரசு வெளியிட்டுள்ள நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் வெளியில் செல்லும்போது, கட்டாயம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நகராட்சி நிர்வாகங்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *