தொழில்துறைகளை தனியார் மயமாக்குவதால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்… பிரியங்கா காந்தி
அரசு பணியிடங்களில் முறையான ஆள்சேர்ப்பு நடத்தப்படாமல் இருப்பதாலும், தொழில்துறைகளை தனியார் மயமாக்குவதாலும், இளைஞர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
டெல்லி, செப்-4

இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ”பணியாளர் தேர்வு ஆணையத்தில் பணி காலியிடங்கள் இருந்தால் தேர்வுகள் நடத்தப்படாது. தேர்வுகள் நடத்தப்பட்டால் முடிவுகள் வெளியிடப்படாது. தேர்வு முடிவுகள் வெளியானால் ஆள்சேர்ப்பு நடத்தப்படுவதில்லை என்று விமர்சித்துள்ளார். அரசு பணியிடங்களில் முறையான ஆள்சேர்ப்பு நடத்தப்படாமல் இருப்பதாலும், தொழில்துறைகளை தனியார் மயமாக்குவதாலும், இளைஞர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும். எனினும் ஆளும் பா.ஜ.க. அரசு, விளம்பரங்களில் பொய்களை வெளியிட்டு உண்மையை மறைத்து வருகிறது” என பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.