காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..5 பேர் பலி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர், செப்-4

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடி என்ற கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து நிகழ்ந்த கட்டடத்தில் திருவிழாக்களுக்கு பயன்படுத்தும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தின் சத்தம் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

வெடிவிபத்தில் கட்டடங்கள் தரைமட்டமாகி உள்ளன. மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

வெடிவிபத்தில் இறந்த 5 பேரும் பெண்கள் என்றும், மேலும் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *