நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரத்திற்கு 30 நிமிடங்கள் ஒதுக்கி அனுமதி

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 30 நிமிடங்கள் கேள்வி நேரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி, செப்-3

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறும் மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் மற்றும் தனிநபர் மசோதாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டும், வழக்கமாக நடைபெறும் சபை நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்விநேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வியாழக்கிழமை அறிவிப்பு வெளியானது. கேள்வி நேரத்திற்கு 30 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *