தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

 

சென்னை.அக்டோபர்.15

தீபாவளி பண்டிகையையொட்டி தாம்பரம் –  நெல்லை, நாகர்கோவில் –  தாம்பரம் இடையே  சிறப்பு ரயில்கள்  இயக்கப்படும் தேதிகளை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 27 ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தென்மாவட்ட மக்கள்   சென்னையிலிருந்து ஊருக்கு சென்று திரும்ப ஏதுவாக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.  தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு வரும் 20,21,23 ஆகிய தேதிகளில் சுவிதா சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படும்.  இதேபோல் நாகர்கோவிலிலிருந்து தாம்பரத்துக்கு  அக்டோபர் 29,30   ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கபபட்டுள்ளது. மேலும் தாம்பரம்- திருச்சி இடையே  வரும் 30ந் தேதி   சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *