தமிழகத்தில் 6 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி

சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து செப்டம்பர் 7-ம் தேதி முதல் கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, செப்-3

தமிழகத்தில் கூடுதலாக 6 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே அமைச்சகத்துக்கு மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஏற்று, செப்டம்பர் 7-ம் தேதி முதல் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து 4 சிறப்பு ரயில்களும், சென்னை எழும்பூரில் இருந்து 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும், சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை – மதுரை, சென்னை – கோவை, சென்னை – குமரி, சென்னை – தூத்துக்குடி, சென்னை – மேட்டுப்பாளையத்துக்கு ரயில்கள் இயக்கப்படும் என்றும், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரை மற்றும் செங்கோட்டைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சென்னை – மதுரை இடையே பாண்டியன் விரைவு ரயிலும், சென்னை – கோவை இடையே சேரன் விரைவு ரயிலும், கன்னியாகுமரி விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில், நீலகிரி விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஏற்கனவே 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *