துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை, செப்-3

திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இரு பதவிகளுக்கும் தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் திமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படும் துரைமுருகன் மற்றும் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்படும் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் நடிகர் ரஜினிகாந்த், “தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு.துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு.டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.” எனப் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *