PM Cares நிதி திட்டத்திற்கு பிரதமர் மோடி ரூ. 2.25 லட்சம் நன்கொடை.. பிரதமர் அலுவலகம்

பிரதமர் மோடி தனது சொந்த வருமானத்தில் இருந்து ரூ.2.25 லட்சம் பி.எம். கேர்ஸ் (PM Cares) நிதித் திட்டத்திற்கு வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டெல்லி, செப்-3

கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வதற்காக மத்திய அரசு சார்பில் ‘பி.எம். கேர்ஸ்’ நிதியம் உருவாக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்து நிதியுதவி பெறும் நோக்கில் இது ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த நிதியம்தொடங்கப்பட்ட 5 நாட்களில் அதில் ரூ.3,076 கோடி செலுத்தப்பட்டிருப்பதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பி.எம். கேர்ஸ்’ வலைதளத்தில் மக்களின் பார்வைக்காக இது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தனது சொந்த வருமானத்தில் இருந்து 2.25 லட்சம் ரூபாய் பிஎம் கேர்ஸ் நிதித்திட்டத்திற்கு நன்கொடை அளித்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *