திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு மனுத்தாக்கல்
திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை, செப்-3

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தனது ஆதரவாளர்களுடன் வந்த துரைமுருகன், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் வழங்கினார். ஏற்கனவே திமுக பொருளாளராக இருந்த துரைமுருகன், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதால், காலியான பொருளாளர் பதவிக்கு டி.ஆர். பாலு வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், மறைந்த க. அன்பழகன் வகித்து வந்த திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதையடுத்து, திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆா்.பாலுவும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
பொதுச்செயலாளா், பொருளாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக திமுகவின் பொதுக்குழு செப்டம்பா் 9-ஆம் தேதி கூட உள்ளது.
அதற்கு முன்னதாக திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்துக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். பொதுச் செயலாளா் பதவிக்கு துரைமுருகன் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்படுவார். ஏன் என்றால், இந்தப் பதவியில் போட்டியிட அவா் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளார்.