சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும்..!

சென்னை, செப்-3

சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

செப்டம்பர் 7ம் தேதி முதல் சென்னையில் விமான நிலையம் முதல் வண்ணரப்பேட்டை இடையே மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. பரங்கிமலை- சென்ட்ரல் இடையே 9ம் தேதி முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.காலை 8 மணி இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும். அலுவலக நேரமான காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 5 நிமிடத்திற்கு ஒரு ரெயில் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும். நிறுத்தங்களில் 20 வினாடிகளுக்குப் பதிலாக 50 வினாடிகள் ரெயில் நின்று செல்லும். ரெயில் இருக்கைகளில் ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பயணிகள் அமர வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *