ஈரோடு அருகே இருசக்கர வாகனம் மீது அரசு நகரப் பேருந்து மோதி விபத்து: 2 பெண்கள் உட்பட 4 பேர் பலி..!

ஈரோடு மாவட்டம் சோலார் அருகே அரசு நகரப் பேருந்து மோதி 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

ஈரோடு, செப்-3′

தமிழகம் முழுவதும் தற்போது மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று ஈரோட்டில் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்தடுத்து 2 இருசக்கர வாகனங்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனங்களில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விபத்தில் உயிரிழந்துவிட்டனர். மொடக்குறிச்சி அருகே குளூரை சேர்ந்த பாலசுப்பிரமணி, மோகாம்புரி, பாவாயம்மாள், மரகதம் ஆகியோர் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *