புதுச்சேரி மக்கள் நீதி மய்ய தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு

புதுச்சேரி மக்கள் நீதி மய்ய மாநில தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஏ.எஸ் சுப்பிரமணியன் (70) கொரோனாவால் உயிழந்தார்.

புதுச்சேரி, செப்-3

புதுச்சேரி உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர், எம்.ஏ.எஸ்.சுப்பிரமணியன். 2012-2014 வரை திமுக அமைப்பாளர் இருந்த இவர் 2018 ஆம் ஆண்டு முதல் மக்கள் நீதி மய்யத்தின் மாநில அமைப்பாளராக இருந்து வந்தவர், சில மாதங்களுக்கு முன்பு மாநில தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *