பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு முடக்கம்..!

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர்.

டெல்லி, செப்-3

அரசின் மிக முக்கியமான, தனிப்பட்ட இணையத்தில் கூட ஹேக்கர் ஊடுருவிவிடுகிறார்கள். இந்தநிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மிகப் பெரும் உலகப் பிரபலங்கள் பலர் இன்று ஹேக்கர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பில்கேட்ஸ், எலான் மஸ்க், கேன் வெஸ்ட், கிம் கர்டாஷின் வெஸ்ட், ஜெப் பெசோஸ், மைக் ப்ளூம்பெர்க் ஆகியோரது ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. அவர்களுடைய ட்விட்டர் பக்கங்களில் பிட்காயினுக்கு விளம்பரம் செய்யும் வகையில் ட்விட் செய்யப்பட்டிருந்தது.

இது போன்று பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு இன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தனிப்பட்ட இணையதளத்திற்கான @narendramodi_in என்ற ட்விட்டர் கணக்கு செயல்பட்டு வருகிறது. இதனை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த ட்விட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்கள், பிரதமரின் கொரோனாவுக்கான தேசிய நிவாரண நிதி ( PM-CARES) திட்டத்திற்கு பிட்காயின் வழியாக பணம் அனுப்புமாறு தெரிவித்துள்ளனர். இதுபற்றி தகவலறிந்த ட்விட்டர் நிறுவனம் உடனே மீட்பு நடவடிக்கையில் இறங்கியது.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ட்விட்கள் நீக்கப்பட்டுள்ளன.இதுதொடர்பாக இ-மெயில் வாயிலாக ட்விட்டர் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோடியின் தனிப்பட்ட இணையதளத்திற்கான (https://www.narendramodi.in/) ட்விட்டர் கணக்கை முழுவதுமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *