தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செப்-2

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் 15 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *