நடிகர் பவன்கல்யாண் பிறந்தநாளுக்கு பிளக்ஸ் வைக்க சென்ற 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலி

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டுக்கு அருகே பிளக்ஸ் வைக்க சென்ற 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளனர்.

ஐதராபாத், செப்-2

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் பகுதியில் வசிக்கும், நடிகரும், ஜனசேன கட்சித் தலைவருமான பவன்கல்யாண்க்கு இன்று பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாள் விழாவிற்காக பவன் கல்யாண் அவர்களின் வீடு முன் பிளக்ஸ் வைப்பதற்காக சோக சேகர், அருணாசலம் மற்றும் ராஜேந்திரன் ஆகிய மூன்று ரசிகர்கள் அங்கு சென்றனர். 25 அடி உயர பிளக்சை கட்டும் பணியின் போது, மின் கம்பிகள் மீது உரசியது. மின்சாரம் தாக்கியதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே, தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் நடிகர் பவன் கல்யாண் பிறந்தநாளை கொண்டாட காரில் 5 இளைஞர்கள் முழுகு பகுதி நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது பசர்கொண்டா அருகே முன்னாள் சென்ற காரை முந்திச் செல்லும் போது எதிரே வந்த லாரி இளைஞர்களின் கார் மீது மோதியது. லாரி மோதியதில் காரில் சென்ற மேகலா ராஜேஷ், சபீர், மெடிச்சாந்து, ரோஹித், பவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *