இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 37.69 லட்சமாக அதிகரிப்பு..!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 66 ஆயிரத்தை தாண்டியது.

டெல்லி, செப்-2

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு 37,69,524 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78,357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1045 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66,333 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,019,09 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 62026 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,01,282 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 4,43,37,201 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 10,12,367 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *