திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல்

திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று வேட்புமனு பெறலாம் என்று அக்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

சென்னை, செப்-2

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் இன்று வேட்புமனு பெறலாம். தலைமை அலுவலகத்தில் ரூ.1000 கட்டணம் செலுத்தி வேட்புமனு பெற்றுக்கொள்ளலாம். திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவோர் வேட்புமனு கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த வேட்புமனுக்களை நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை தாக்கல் செய்யலாம். நாளை மறுநாள் காலை 11 மணிக்கு வேட்புமனு பரிசீலனை நடைபெறும். 5ந்தேதி மதியம் 1 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெறலாம். 5ந்தேதியன்று மாலை 4 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *