செப்டம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்..!

வரும் செப்டம்பர் 14-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் கூடுகிறது என சட்டப்பரேவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

சென்னை, செப்-1

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்று வந்தது. கொரோனா பரவல் காரணமாக, மார்ச் 23-ம் தேதியோடு சட்டசபை நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன. சட்டசபை விதிகளின்படி, கூட்டத்தொடர் 6 மாத இடைவெளியில் கூட்டப்பட வேண்டும். அதன்படி, வரும் செப்டம்பர் 23-ந் தேதிக்குள் மீண்டும் சட்டசபையை கூட்ட வேண்டும்.

இதைத் தொடர்ந்து சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கடந்த 22-ம் தேதி சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டசபை கூட்டம் செப்டம்பர் 14-ம்தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கூட்டத்திற்கு முன்பாக எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *