அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது..பழைய பஸ் பாசை பயன்படுத்தலாம்.. அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை, செப்-1

சென்னை பல்லவன் பணிமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மாவட்ட எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படும். அடுத்த மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக எல்லையிலுள்ள பேருந்து நிறுத்தம் வரை பேருந்துகள் இயக்கப்படும். இரவு 9 மணி வரை மட்டுமே அரசு பேருந்துகள் இயக்கப்படும். பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப அரசு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அறிகுறி இருந்தால் மட்டுமே ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது. அரசு பேருந்துகளில் பழைய மாதாந்திர பாஸ் செப்டம்பர் 15ந்தேதி வரை செல்லும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *