திமுக பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய செப்டம்பர் 9ம் தேதி கூடுகிறது, திமுக பொதுக்குழு..!!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 3 ஆம் தேதியும், பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 9 ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை, செப்-1

இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்வது குறித்து கட்சியின் பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 9 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் என்றும் கழக உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று திமுக மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 3 (வியாழக்கிழமை) அன்று காலை 10:30 மணியளவில், காணொலி வாயிலாக நடைபெறும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், பொருளாளராக டி.ஆர்.பாலு, எவ.வேலு, ஆ.ராசா ஆகியோரில் ஒருவர் தேர்வாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *