அப்துல் கலாம் பிறந்த நாள் விழா: நினைவிடத்தில் மரியாதை

ராமேஸ்வரம்.அக்டோபர்.15

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளான இன்று அவரது நினைவிடத்தில் மாணவ மாணவிகள், உறவினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

 ஏவுகணை நாயகன் என்று போற்றப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் 88-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ராமேசுவரம் பேய்கரும்பில் உள்ள அவரது நினைவிடம் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.. இன்று காலை அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர் கலாம் நினைவிடத்தில்   மலர் தூவி மரியாதை செய்தனர். இதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் அப்துல்கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

ராமேசுவரத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலா வந்திருந்த பொதுமக்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *