இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 36.91 லட்சத்தை கடந்தது..!
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 36.91 லட்சத்தை கடந்துள்ளது. அதே போல், பலி எண்ணிக்கையும் 65 ஆயிரத்தை தாண்டியது.
டெல்லி, செப்-1

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 69,921 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 819 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 36,91,167 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 28,39,883 பேர் குணமடைந்துள்ள நிலையில், 7,85,996 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 65,288 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று 65,081 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் 28,39,882 பேருடன் 76.63 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். 21.59 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 1.78 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர்.