தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை, செப்-1

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் கட்சி சார்பில் வரவேற்பும், பாஜக அலுவலக திறப்பும் சமீபத்தில் நடந்தது. கள்ளக்குறிச்சியில் பாஜக மாவட்ட அலுவலகம் திறக்கும் விழாவில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். அலுவலக திறப்பு விழாவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாகவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் பாஜக மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 250 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறி நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடியது உள்ளிட்ட விதிமீறல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *