தமிழகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்..!!

5 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதால் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றனர். வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சென்னை, செப்-1

தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இறை வழிபாட்டு தலங்களில் நேற்று சுத்தம் செய்து, சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்தது. இதற்கான பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். வழிபாட்டு தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம் பிறப்பித்து உள்ளார்.

இந்நிலையில் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பழனி, திருச்செந்தூர், திருத்தணி முருகன் கோவில்களில் தனிநபர் இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் குடும்பநீண்ட இடைவேளைக்கு பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் குடும்பம் குடும்பமாக திரண்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக லட்டு பிரசாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து இன்று தான் துவங்கியது என்பதால் வெளியூர் பக்தர்கள் இன்று வர முடியவில்லை. இருப்பினும் உள்ளூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக கோவில் அம்மன் சன்னதி கிழக்கு நுழைவு வாயிலில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

வெப்பநிலை கணக்கிடுதல், தானியங்கி கிருமி நாசினி இயந்திரம் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகுதான் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே அறிவுறுத்தியபடி பக்தர்கள் மொபைல் போன் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. கோவிலில் அர்ச்சனை பூஜைகள் செய்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தரிசனம் முடித்த பின்பாக கோவிலில் அமர்வதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *