தமிழ் படத்தில் நடிக்கும் ஹர்பஜன் சிங்

அக்டோபர்.15

பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங், முதல்முறையாக தமிழ்ப் படமொன்றில் நடிக்கவுள்ளார். 

சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் டிக்கிலோனா என்கிற படத்தில் ஹர்பஜன் சிங் நடிக்கும் தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பலூன் படத்தை இயக்கிய சினிஷ், கேஜேஆர் ஸ்டூடியோஸுடன் இணைந்து கார்த்திக் யோகி இயக்கும் இப்படத்தைத் தயாரிக்கிறார்.  இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் டிக்கிலோன படத்தில் நடிக்க உள்ளதை உறுதி செய்துள்ளார்.

#தல #தளபதி உருவாகிய பூமி. #தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னைத் தூக்கி நிறுத்திய உறவுகளே… உங்களால் வெள்ளித்திரையில். இந்த  வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன் என்று ஹர்பஜன் சிங் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *