பாஜக தனித்து நின்றாலும் 60 தொகுதிகளில் வெற்றி பெறும்.. எல்.முருகன் நம்பிக்கை
பா.ஜ.க தனித்து நின்றாலும் 60 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சி, ஆகஸ்ட்-31

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அதிமுக – பாஜக கூட்டணி உறவு சிறப்பாக உள்ளது. சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க தனித்து நின்றாலும், 60 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. மும்மொழி கொள்கையில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. பாஜகவில் யார் வேண்டுமானாலும் இணையலாம், பிறகு எப்படி செயல்படுகிறார்கள் என்பதே முக்கியம், அடுத்த சட்டமன்றத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் அமர்வார்கள் என கூறியுள்ளார்.