சென்னையில் நாளை முதல் பஸ் பாஸ் பெற்றுக்கொள்ளலாம்… போக்குவரத்துத்துறை
சென்னையில் நாளை முதல் மாநகர பேருந்துகளுக்கான பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. தினசரி பாஸ், மாதாந்திர பாஸ், விருப்பம் போல் பயணம் செய்யும் 1000 ரூபாய் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை , ஆகஸ்ட்-31

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளை அளித்து செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தளர்வுகளில் செப்டம்பர் 1 முதல் மாவட்டங்களுக்குள் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னை நகர பேருந்துகளும் 50% பயணிகளுடன் இயங்க உள்ளது.
இந்நிலையில், சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிக்க, தினசரி, மாதாந்திர மற்றும் ஆயிரம் ரூபாய் பஸ் பாஸ்களை நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.