பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா..!

பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, ஆகஸ்ட்-31

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா காரணமாக 4,22,085 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்தநிலையில் பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இல.கணேசன் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *