இது தீப்பிடித்த காடு பறவைகளே! பத்திரம்..கவிஞர் வைரமுத்து ட்வீட்
சென்னை, ஆகஸ்ட்-31

ஊரடங்கு தளர்வுகள் குறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஊருக்கு வழங்கப்பட்ட ஊரடங்கின் தளர்வில் உயிர்க் கொல்லி நுழைந்துவிடக் கூடாது. மீண்டும் இயங்கப்போகும் வாழ்வியல் வெளியில் கடும் கட்டுப்பாட்டைப் பெரிதும் கைக்கொள்வீர் பெருமக்களே! இது தீப்பிடித்த காடு..பறவைகளே! பத்திரம், என கூறியுள்ளார்.