இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு? புதிய கருத்து கணிப்பு

சென்னை.அக்.15

விக்கிரவாண்டி,நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக. வுக்கு வெற்றி வாய்ப்பில்லை என பண்பாடு மக்கள் தொடர்பகம் கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.

      இது தொடர்பாக பண்பாடு மக்கள் தொடர்பகம் (லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் )வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

        தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 21ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு ?  என கருத்து கணிப்பு கடந்த அக் 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடைபெற்றது, இதில் 54% ஆண்கள் மற்றும் 46% பெண்கள் பங்கேற்றனர். இதில் திமுகவை விட அதிமுக பின்னடைவை சந்திக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவுக்கு  – 43.20 சதவீதம் வாக்குகளும், திமுக – 43.60 சதவீத வாக்குகள் கிடைக்கும் என  கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சிக்கு 4.10 சதவீத வாக்குகளும் பிற கட்சிகள் – 9.10 சத வீத வாக்குகளும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ங்குநேரி தொகுதியில் , அதிமுகவுக்கு – 37.60சதவீத வாக்குகள், திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு – 40.90 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு 8.30 சதவீத வாக்குகளும் பிற கட்சிகளுக்கு 13.20 சதவீத வாக்குகளும் கிடைக்கும்  என லயோலா முன்னாள் மாணவர்களின் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் – 44.60 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெறும் எனவும்  என்.ஆர்.காங்கிரஸ் – 39.10 சதவீத வாக்குகளை பெறும் எனவும் நாம் தமிழர் கட்சி – 5.30 சதவீத வாக்குகளை பெறும் என  அந்த கருத்து கணிப்பில்  கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *