கொரோனா நோயாளிகளை அழைத்துச்செல்ல கூடுதலாக 118 ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்

கொரோனா நோயாளிகளை அழைத்துச்செல்ல கூடுதலாக 118 ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சென்னை, ஆகஸ்ட்-31

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம்தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இதன்படி தமிழகம் முழுவதும் தற்போது 1,005 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகிறது. இந்த சேவையை விரிவுபடுத்த 500 ஆம்புலன்ஸ் வாகனங்களை கூடுதலாக கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்பாட்டிற்கு வழங்குவதாக முதல்வர் அறிவித்தார்.

இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கான 118 ஆம்புலன்ஸ் வாகனங்களை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆம்புலன்ஸ்களின் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஆம்புலன்ஸ்க்குள் ஏறி செயல்பாட்டை ஆய்வு செய்தார்.

இதில் அரசு சார்பில் 90 வாகனங்களும், தனியார் நிறுவனம் சார்பில் 18 வாகனங்களும் செயல்பட உள்ளன. 90 அவசர ஊர்திகளில் 10 வாகனங்கள் ரத்த சேவை பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்த அவசர வாகனங்கள் தமிழகம் முழுவதும் பிரித்து அனுப்பப்படும். தொடர்ந்து, சில தினங்களில் மீதமுள்ள அவசர வாகனங்கள் பயன்பாட்டிற்கு வரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *