நீலகிரி மாவட்டத்துக்குள் வர இ-பாஸ் கட்டாயம்.. ஆட்சியர்

நீலகிரி மாவட்டத்துக்கு வர இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வருவதற்கு இ-பாஸ் கட்டாயம் என அவர் தெரிவித்துள்ளார்.

உதகை, ஆகஸ்ட்-31

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க கலெக்டர் அனுமதியுடன் அவசிய காரணங்களுக்கு மட்டும் இ-பாஸ் வழங்க அரசு அனுமதித்து உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்துக்கு வருவதற்கு இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும். மேலும் நீலகிரியில் தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் திறப்பது குறித்து கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றார்.

நீலகிரியில் இருந்து தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவை இல்லை. ஆனால், மற்ற மாவட்டங்களில் இருந்து நீலகிரி வருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும். நீலகிரி வரும் பொதுமக்களை, மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினர் இ-பாஸ் பெற்று வருகிறார்களா என்று தீவிரமாக கண்காணித்த பின்னரே உள்ளே அனுமதிப்பார்கள். ஒருவேளை இ-பாஸ் பெறாமல் வந்தால் கண்டிப்பாக திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *