செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டவுள்ளது… மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

வருகிற செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டவுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு நடைபெறவுள்ளது. ஊட்டச்சத்து தொடர்பாக போட்டிகள் நடத்தப்படவுள்ளதால் மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி, ஆகஸ்ட்-30

பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவ்வகையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது:-

பண்டிகை காலம் களைகட்ட தொடங்கி உள்ளதல் மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அதிக எச்சரிக்கையுடன் இந்த பண்டிகைகளை மக்கள் கொண்டாட வேண்டும். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளில்கூட ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியின்போது இயற்கை முறையில் செய்த விநாயகர் சிலைகளை பல இடங்களில் காண முடிந்தது. இந்த ஆண்டு நெல், கோதுமை உள்ளிட்ட தானியங்கள் அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. நமது நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளை கணினிமயமாக்குவது சிறப்பானதாக இருக்கும். நமது பழங்கால விளையாட்டுகளை புதிய டிஜிட்டல் கேம்களாக உருவாக்க வேண்டும்.

வருகிற செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படும். மாதம் முழுவதும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஊட்டச்சத்து தொடர்பான போட்டிகள் நடத்தப்பட உள்ளதால், மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

குழந்தைகள் ஒன்று சேர்ந்து விளையாடும் போது ஒற்றுமை வளர்கிறது. இந்த முயற்சி நல்ல கட்டமைப்பை உருவாக்கி உள்ளது. விளையாட்டு என்பது வெறும் பொழுது போக்கு அல்ல. தேசிய கல்விக் கொள்கையில் கூட இதுபற்றி விவரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் சிந்திக்கும் திறன் வளர்ந்துள்ளது. உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் உள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மிகவும் பிரபலம்.
கடந்த காலத்தை நினைவூட்டுவதும் எதிர்காலத்தை பிரகாசமாக்குவதும் பொம்மைகள். விளையாட்டு பொம்மைகள் என்பது குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும். பொம்மைகள் உருவாக்குவதை புதிய கல்விக்கொள்கையில் ஒரு பாடத்திட்டமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் ஏற்றுமதி செய்யப்படவேண்டும்’

இவ்வாறு அவர் பேசினார்.

புதிய கல்விக் கொள்கை இந்தியாவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் இந்திய ஆசிரியர்கள் பெரும் சவாலான பணிகளை சிறப்பாக மேற்கொள்கின்றனர். கொரோனா காலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து பெரும் மாற்றத்தை உருவாக்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஓணம் திருவிழா கொண்டாட்டம் இன்று வெளிநாடுகளுக்கும் விரிவடைந்துவிட்டது என்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா நாடுகள் உள்பட எங்கும் உற்சாகமாக ஓணம் கொண்டாடப்படுகிறது. மேலும் இது திருவிழாவாக மாறிவருவதாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *