காஷ்மீர்: காங்கிரஸ் முதலைக்கண்ணீர் வடிக்கிறது-மோடி கடும் சாடல்

அரியானா, அக்டோபர்-14

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் முதலைக்கண்ணீர் வடிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் அரியாணா மாநிலங்களுக்கு வருகிற 21-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இவ்விரு மாநிலங்களிலும் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. இங்கு ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அரியானாவில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியா முன்னேற்ற பாதையில் செல்கிறது. இந்தியாவுடன் உலக தலைவர்கள் கைகோர்த்து நிற்கின்றனர். கொடுத்த வாக்குறுதிகளை நான் நிறைவேற்றி வருகிறேன். எதிர்கட்சியினர் மக்களை பிரித்தாளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அகங்காரத்தால் காங்கிரஸ் அழிவை நோக்கி செல்கிறது.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியர்கள் யாரும் விட்ட கொடுக்க மாட்டார்கள். காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மட்டும் எதிர் கருத்தை கொண்டுள்ளது. 370 சட்டப்பிரிவை நாங்கள் நீக்கியதுபோல் காங்கிரசால் செய்ய முடியுமா? காங்கிரஸ் தனது தெளிவான நிலையை வெளிப்படுத்த வேண்டும். காங்கிரஸ் முதலைக்கண்ணீர் வடிக்கிறது. தேச பாதுகாப்பு விவகாரத்தில் காஷ்மீர் சமரசம் செய்ய நினைக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *